2025 மே 12, திங்கட்கிழமை

கந்தப்பளை வாராந்த சந்தை இடைநிறுத்தம்

Kogilavani   / 2020 ஒக்டோபர் 31 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ் 

நுவரெலியா கந்தப்பளை நகரில் சனிக்கிழமைகளில் இடம்பெறும்  வாராந்த சந்தை, மறுஅறிவித்தல் வரை இடம்பெறாது என, நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜ் தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர், நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக  பொதுஇடங்களில் மக்கள்  ஒன்று கூடுவதைத்  தவிர்க்கும் வகையில் இந்த  வாராந்த சந்தை இடம்பெறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக  தெரிவித்தார். 

வாராந்த சந்தைக்கு வருகை தரும் தூர பிரதேச வர்த்தகர்களுக்கு அறிவிக்கப்பட்டதாகவும் இருப்பினும் இன்று (31) அதிகாலை சந்தைக்கு தூர பிரதேசங்களிலிருந்து வர்த்தகர்கள் வந்துள்ளனர் என்றும் அவர்களை கந்தப்பளை பொலிஸார் திருப்பியனுப்பினர் என்றும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X