2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

கந்தப்பளை வெள்ளம்; தடுப்பதற்கு நடவடிக்கை

Freelancer   / 2021 நவம்பர் 07 , பி.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்

நுவரெலியா பிரதேச சபையின் அதிகாரத்திற்குட்பட்ட கந்தப்பளை பிரதேசத்தில் கடந்த இரண்டு வாரங்களாக மாலை வேளையில் தொடர்ந்து பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு பிரதான காரணமாக கந்தப்பளை பகுதியில் தற்பொழுது மேற்கொள்ளப்படும் வீதி அபிவிருத்தி திருத்த வேலைகளே காரணம் என கந்தப்பளை நகர வர்த்தகர்களும் பொது மக்களும் தெரிவிக்கின்றனர்.

கந்தப்பளை நகர வர்த்தகர்களும் பொது மக்களும் சம்பந்தப்பட்ட விடயத்தை நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜியின் கவனத்திற்கு கொண்டுவந்னர்.

அதையடுத்து, நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜ்  தலைமையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர்கள் மற்றும் கந்தப்பளை வீதி திருத்த ஒப்பந்ததாரர்கள், திட்ட முகாமையாளர்கள் ஆகியோர் கந்தப்பளை நகரில் வெள்ளப்பெருக்கு ஏற்படாத வகையில் முறையாக வேலைத்திட்டங்களை அமுல்படுத்துவதற்கு வெளிக்கள விஜயமொன்றை இன்று (07) மேற்கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X