2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

கந்தலோயா பாடசாலைக்கு பஸ் நூலகம்

R.Maheshwary   / 2022 ஒக்டோபர் 09 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரா.கமல்

"புத்தகங்கள் நம் கண்கள்" எனும் தொனிப்பொருளில்25ஆவது நடமாடும் நூலகம் சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிகிரி கொப்பேகடுவயால், எட்டியந்தோட்டை- கந்தலோயா தமிழ் மகா வித்தியாலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பாடசாலையின் அதிபர் மு.கருணாகரன் தலைமையில் நேற்று முன்தினம் (7) இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிகிரி கொப்பேகடுவ,

 மிகவும் கடினமான பாடசாலைகளை மையப்படுத்தி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் இந்த நடமாடும் நூலகங்கள் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இதற்காக பாவனைக்கு உதவாத  இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான  பஸ்கள், நூலகமாக மாற்றப்பட்டு, அதற்குத் தேவையான உபகரணங்களும் புத்தகங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .