Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 மார்ச் 08 , மு.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமணசிறி குணதிலக
மொனராகலை பொலிஸ் பிரிவின் குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய, கரவிலகன்ன பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்குள் புதையல் தோண்டிக்கொண்டிருந்த 42 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த வீட்டுக்குள் அகழ்வதற்காக பயன்படுத்தப்பட்ட உபரணங்களும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.
மரணமடைந்த தன்னுடைய தாத்தா ஒருநாள் கனவில் வந்தார். வீட்டுக்குள் ஓரிடத்தில் புதையல் இருக்கிறது. அதனை அகழ்ந்து எடுத்துக்கொள்ளுமாறு தன்னிடம் கூறினார் என பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ள அவர் (பேரன்) அதனால்தான் அகழ்ந்தேன் என்றும் தெரிவித்துள்ளார்.
கனவில் வந்த தாத்தா என்னிடம் கூறியதை முதலில் ஏற்றுக்கொள்ளவில்லை எனினும், இரண்டாவது தடவையாகவும் வந்தவர், மீண்டும் அதையே கூறினார். சுமார் 12 அடிக்கு ஆழமாகவும் அகழுமாறு கோரினார். அதனடிப்படையிலேயே வீட்டுக்குள் அகழ்ந்தேன் என்றும் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபரின் வாக்குமூலத்தை ஏற்றுக்கொள்ளாத அதிகாரிகள் அவரைக் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர்.
42 minute ago
56 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
56 minute ago
2 hours ago
2 hours ago