Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஏப்ரல் 05 , பி.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம் எஸ் எம் நூர்தீன்
பண்டாரவளை - கபரகலை பகுதியில் மார்ச் மாதம் 19 திகதி ஏற்பட்ட மண்சரிவு அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான முதற்கட்ட நிவார உதவிகளை மட்டக்களப்பு மாவட்ட படப்பிடிப்பு உரிமையாளர் சங்கம், சங்கத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களின் நண்பர்கள் மற்றும் ஈரோஸ் அமைப்பு ஆகியவற்றின் அனுசரனையுடன் மாக்கந்தை முகாமுக்குச்சென்று உதவிகளை வழங்கி வைத்துள்ளனர்.
மண்சரிவு அனர்த்தத்தில், 75 குடும்பங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் பாரிய இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன், உலருணவு பொதிகளை கையளித்தனர் அத்துடன், சமைத்த உணவினையும் வழங்கி வைத்துள்ளனர்.
அத்தோடு, இரண்டு கட்டமாக இவர்களுக்கு உதவிய மட்டக்களப்பு மாவட்ட படப்பிடிப்பு உரிமையாளர் சங்கத்தினர் மிக விரைவில் இவர்களுக்கான 3 ஆம் கட்ட உதவியினையும் வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
9 hours ago
20 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
20 Jul 2025