Ilango Bharathy / 2021 ஜூன் 23 , மு.ப. 08:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பின் பின்னர் , பெருந்தோட்ட கம்பனிகள் தொழிலாளர்கள் மீது
நாளுக்கு நாள் மேற்கொண்டு வரும் தான் தோன்றித்தனமான அராஜகப் போக்கை கண்டிப்பதாக, புதிய ஜனநாயக மாக்சிச கட்சியின் தேசிய அமைப்பாளர் வெத்திலிங்கம் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த செயற்பாடுகளுக்கு எதிராக, தேசிய ரீதியான போராட்டம் ஒன்றை
முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி வரும் தோட்ட கம்பனிகள், ஆயிரம் ரூபாய் அதிகரிப்பையும் முழ மனதுடன் வழங்கவில்லை என்றார்.
எனவே, பெருந்தோட்டக் கம்பனிகளின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளுக்கு எதிராக
களம் இறங்கி போராட, மலையகத் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து
தொழிற்சங்கங்களும் கருத்து வேறுபாடுகளை மறந்து, முன்வந்தால் மாத்திரமே தோட்ட
கம்பனிகளின் கொட்டத்தை அழைக்க முடியும் என்றும், இதற்கான அழைப்பை புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி விடுப்பதாகவும் தெரிவித்தார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago