Ilango Bharathy / 2021 ஜூன் 30 , மு.ப. 07:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
காலணித்துவ ஆட்சியில் வெள்ளையர்களின் அடக்கு முறையிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட
பெருந்தோட்டங்கள், இன்று கம்பனிகளின் அடக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதென
தெரிவித்த இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் சுப்பையா
சதாசிவம், இதனால் இன்று தொழிலாளர்கள் வாழ்வாதார தொழில் மற்றும் பொருளாதார
பின்னடைவை சந்தித்துள்ளனர் என்றார்.
இன்று தொழிலாளர்களுக்கு மதிப்பளிக்காது தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமைகளையும் கம்பனிகள் மீறி வருவதாக குற்றஞ்சுமத்திய அவர்,தொழிற்சங்க அனுபவம் இல்லாதவர்களால் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் அணுகுமுறை காரணமாகவே
தோட்டத்தொழிலாளர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.
எனவே, தொழிலாளர்கள் அனுபவித்து வரும் கஸ்டத்தையும் அவர்களின் உரிமைகள்
மறுக்கப்படுவதையும் தட்டிக்கேட்க அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து செயற்பட
வேண்டுமென தெரிவித்த அவர், அப்போதே கம்பனிக்காரர்களின் அராஜகப் போக்குகளுக்கு
பாடம் புகட்ட முடியும் என்றார்.
35 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
1 hours ago
2 hours ago