2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

கம்பளையிலும் தொற்று அதிகரிக்கிறது.

Gavitha   / 2021 ஜனவரி 07 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவி

கம்பளையில், இருவேறு பகுதிகளில், மேலும் 7 பேருக்கு, கொரேனா வைரஸ் தொற்ற உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கோழி இறைச்சிக்கடை கொத்தணி மூலமே, 7 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

கம்பளை, தொழுவ சுகாதார பிரிவுக்குட்பட்ட கம்பளவத்தை பகுதியைச் சேர்ந்த ஆணொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவரின் குடும்ப உறுப்பினர்களும் அவருடன் நெருங்கப் பழகியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

குடும்ப உறுப்பினர்களுக்கு கடந்த 2ஆம் திகதி பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டபோது, நால்வருக்கு தொற்று உறுதியானது.

இந்நிலையில், கம்பளை ஆண்டியாகடவத்தை பகுதியைச் சேர்ந்த மூவருக்கும் தற்போது தொற்று உறுதியாகியுள்ளது.

தொற்றாளர்கள் அனைவரும் பொல்கொல்ல கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .