Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2025 ஒக்டோபர் 08 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐப்பானில் அண்மையில் நடைபெற்ற சிறந்த தேயிலை தயாரிப்புக்கான டிராகன் போல் தங்க விருதை (Dragon ball Gold winner) தலவாக்கலை பெருந்தோட்ட கம்பனிக்குட்பட்ட கிரேட்வெஸ்டன் தோட்டம் பெற்றுக்கொண்டது.
இதற்காக முன்னின்று உழைத்த தோட்ட தொழிற்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் தொழிற்சாலை தொழிலாளர்களை கௌரவிக்கும் முகமாக தலவாக்கலை பெருந்தோட்ட கம்பெனியின் நிறைவேற்று பணிப்பாளர் ரொஷான் இராஜதுரையினால் நினைவுச்சின்னம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (07) இடம்பெற்றது.
இந்நிகழ்வுகள் கிரேட்வெஸ்டன் தோட்ட பிரதி பொது முகாமையாளர் சரத் ரணவீர தலைமையில் கிரேட்வெஸ்டன் தோட்ட தொழிற்சாலையில் நடைபெற்றது.
இதன்போது தலவாக்கலை பெருந்தோட்ட கம்பெனியின் நிறைவேற்று பணிப்பாளர் ரொஷான் இராஜதுரை,கிரேட்வெஸ்டன் தோட்ட பிரதி பொது முகாமையாளர் சரத் ரணவீர, கிரேட்வெஸ்டன் தோட்ட உதவி அதிகாரிகள் ஹெஹான் அபேவர்தன, என்.பி.வலகம்பாய, கிரேட்வெஸ்டன் தேயிலை தொழிற்சாலை நிர்வாகி பரமசிவம், தோட்ட பொதுநல உத்தியோகத்தர் கமல், தொழிற்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் தொழிலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இலங்கையில் காணப்படும் 108 தேயிலை தோட்டங்களில் கடந்த மூன்று வருடங்களாக சிறந்த தேயிலை உற்பத்தி நிலையமாக கிரேட்வெஸ்டன் தேயிலை தொழிற்சாலை முதலாம் இடத்தில் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பி.கேதீஸ்
49 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
1 hours ago
2 hours ago