Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2023 ஏப்ரல் 03 , மு.ப. 01:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
அக்குறணை, குருகொட பிரதேசத்தில் வாகனம் பழுது பார்க்கும் இடம் ஒன்றை நடத்தும் போர்வையில் சட்டவிரோதமாக மாடுகளை அறுக்கும் இடமொன்றை (கொலைக்களம்) நடத்திய மூவரை அலவத்துகொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸ் அவசர பிரிவுக்கு நேற்று (02) கிடைத்த தகவலின் பிரகாரம் அவ்விடத்துக்குச் சென்ற போது இந்த சட்டவிரோதமாக மாடு அறுக்கும் இடத்தை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இவ் இடத்தை வாகனம் பழுது பார்ப்பதற்காக (கராஜ்) வாடகைக்கு விடப்பட்டதாகவும், இதிலுள்ள உள் அறையை மாடுகளை வெட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது வெட்டப்பட்ட மாட்டின் சுமார் 147 கிலோ கிராம் இறைச்சி மற்றும் இவ்விடத்தை வாடகைக்கு எடுத்தவர் மற்றும் மாட்டை அறுப்பதற்கு உதவிய இருவர் உட்பட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸார் கைப்பற்றிய மாட்டிறைச்சி தொடர்பில் பொதுச் சுகாதார பரிசோதகரின் அறிக்கையைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அலவத்துகொட பொலிஸ் நிலையப் பிரதான பொலிஸ் பரிசோதகர் சுஜீவ குணதிலக்கவின் பணிப்புரையின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் உபாலி கருணாவன்ச, சார்ஜன்ட் சமரகோன், ஜயந்த, செனரத் ஆகியோரினால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
6 hours ago
6 hours ago