2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கரோலினா தோட்ட தொழிற்சாலை விவகாரம் முடிவுக்கு வந்தது

R.Maheshwary   / 2021 செப்டெம்பர் 24 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரா.யோகேசன்

வட்டவளை- கரோலினா தோட்ட தொழிற்சாலை எதிர்வரும்  3 வாரங்களில், மீண்டும் திறக்கப்படும் என. தோட்ட சிரேஷ்ட அதிகாரி உறுதி வழங்கியுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் நிதி செயலாளரும் கொட்டகலை வர்த்தக சங்க தலைவருமான புஸ்பா விஸ்வநாதன் தெரிவித்தார்.

கரோலினா தோட்ட தொழிற்சாலை திருத்த வேலை காரணமாக, கடந்த சில நாட்களாக மூடப்பட்டிருந்த்தால் , நிரந்தரமாக மூடப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் தோட்ட மக்கள் நேற்று (23)  வேலைக்கு செல்வதை தவிர்த்து, இதற்கு தீர்வு வேண்டுமென கோரிக்கை முன்வைத்தனர்.

இந்நிலையில், இவ்விடயம் தொடர்பாக  தோட்ட கமிட்டி தலைவர் குமார் ஊடாக  மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வே.இராதாகிருஷ்ணனின், கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து, அவரின் ஆலோசனைக்கு ஏற்ப குறித்த தோட்டத்திற்கு சென்ற மலையக மக்கள் முன்னணியின் நிதிசெயலாளரும் கொட்டகலை வர்த்தக சங்க தலைவர் புஸ்பா, தோட்ட சிரேஷ்ட அதிகாரியுடன் பேச்சு வார்த்தை நடாத்தியுள்ளனர்.

இப்பேச்சுவார்த்தையையடுத்து  3  வாரங்களில் குறித்த தொழிற்சாலையை திறப்பதற்கான கடிதத்தையும் பெற்றுக்கொண்டோம், எவ்வகையிலும் தொழிற்சாலையை மூட இடமளிக்க மாட்டோம் என உறுதியளித்தோம்.என அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .