Janu / 2025 மே 19 , மு.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதி தகராறு காரணமாக ஒன்பது மாத கர்ப்பிணி மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்ததாகக் கூறப்படும் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெனியாய பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் தெனியாய, எனசல் வத்த பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில், சந்தேக நபரும் உயிரிழந்த பெண்ணும் திருமணமாகவில்லை என்றும், தெனியாய எனசல் வத்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
அவர்கள் இருவரும் கூலி வேலைகளில் ஈடுபட்டுள்ளனர் என்று பொலிஸார் கூறுகின்றனர்.
சம்பவம் நடந்த நாளில், இருவருக்கும் இடையே நிதி தகராறு தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது, மேலும் சந்தேக நபர், கர்ப்பிணியாக இருந்த தனது மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட பெண், தெனியாய, எனசல் வத்தப்ப பகுதியைச் சேர்ந்த ஆர். இஷாந்தி என்ற 24 வயது பெண்ணாவார்.
10 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
33 minute ago