2025 ஜூலை 05, சனிக்கிழமை

கற்குவாரிகளுக்கு வெடி வைப்பதை நிறுத்தவும்

Sudharshini   / 2015 நவம்பர் 03 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

கவிதா சுப்ரமணியம்

நாவலப்பிட்டி, இம்புல்பிட்டி, கல்லோயா பிரிவில் அமைந்துள்ள இரண்டு கற்குவாரிகளுக்கு வெடி வைத்துக் கற்களை அகற்றுவதால் தாம் மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் கற்குவாரிகளுக்கு வெடி வைக்கும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துவதற்கு உரியவர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் இம்புல்பிட்டி தோட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாவலப்பிட்டி, இம்புல்பிட்டி தோட்டத்திலுள்ள கல்லோயா பிரிவில் கடந்த 29ஆம் திகதி மண்சரிவு ஏற்பட்டதுடன் இம்மண்சரிவுக்கு கல்குவாரியில் வெடி வைப்பதே காரணமென்றும் அம்மக்கள் கூறினர்.

கடந்த 2007ஆம் ஆண்டு குறித்த தோட்டத்தில் சுமார் 2,000 அடி உயரத்தில் 57 பேர்ச் உடைய காணி குத்தகைக்கு விடப்பட்டது.    அன்றிலிருந்து குறித்த பகுதியில் வெடி வைத்து கற்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

மேற்படி பகுதிக்கு கீழ் 30 குடும்பங்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வருகின்றனர். இந்த கற்குவாரி காரணமாக தமது குடியிருப்புகள் மண்சரிவில் அழியும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாகத் தோட்ட மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே, கற்குவாரியில் வெடிவைத்துக் கற்களைத் தகர்க்கும் நடவடிக்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி மனுவொன்றை மனித உரிமைகள் திணைக்களத்துக்கு அனுப்பவுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .