Kogilavani / 2015 செப்டெம்பர் 10 , மு.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹொமட் ஆஸிக்
அலவத்துகொடை, எட்டாம் கட்டைப் பகுதியிலுள்ள கற்பாறையிலிருந்து தவறி விழுந்து இளம் குடும்பஸ்தர் பலியாகியுள்ளார்.
அலவத்துகொடை, தெல்கஸ்கொடையைச் சேர்ந்த காலியப்பா சிவகுமார் (வயது 23) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே, நேற்று புதன்கிழமை உயிரிழந்துள்ளார்.
கருங்கற்கள் உடைப்பதை பிரதான தொழிலாக கொண்ட மேற்படி குடும்பஸ்தர், வழமைப்போன்று புதன்கிழமையும் கருங்கற்கள் உடைப்பதற்காக சென்றுள்ளதுடன் 50 அடி உயரமான கருங்கற் பாறையில் கற்கள் உடைக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்த போது தவறி விழுந்துள்ளார்.
கடுங்காயக்குள்ளான இவரை கண்டி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதும் அங்கு அவர் உயிரிழந்துள்ளார். இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக கண்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
53 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
1 hours ago
2 hours ago