Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 ஜனவரி 11 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆர்.ரமேஸ்
தொழிற்சங்க பலத்தைத் தனக்குத் தந்தால், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்பார்க்கும் நியாயமான சம்பளத்தைத் தான் பெற்றுக்கொடுப்பதாக உறுதியளித்துள்ள மலையகப் புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், கறுப்புச் சட்டைக் கூட்டமென்று, மலையகத்தின் மிக முக்கிய தொழிற்சங்கமொன்றை விமர்சித்துள்ளதுள்ளார்.
மேலும், கறுப்புச் சட்டைக் கூட்டமென்று தான் விமர்சித்த அந்தத் தொழிற்சங்கத்தை, மக்கள் எவ்வாறு அரசியல் ரீதியாக ஓரங்கட்டினார்களோ, அதேபோன்று, தொழிற்சங்க ரீதியாகவும் பின்தள்ள வேண்டுமென்றும் சாடினார்.
தனிவீட்டுத் திட்டத்தின் கீழ், பத்தனை - போகாவத்தை, மவுண்ட்வேர்ணன் ஆகிய தோட்டங்களில் நிர்மாணிக்கப்பட்ட 105 வீடுகளை, மக்களின் பாவனைக்காக, நேற்று (10) கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், மலையகத்தில் இரண்டு கூட்டங்கள் உள்ளதெனத் தெரிவித்ததுடன், ஒன்று, மலையக மக்கள், நல் வாழ்க்கையை வாழ வேண்டுமென்று நினைத்து, அரசியல் செய்யும் கூட்டமென்றும் மற்றொன்று, மலையக மக்கள், முன்னேற்றம் எதுவுமின்றி, லயன் வாழ்க்கையே வாழவேண்டுமென்று நினைக்கின்ற கூட்டமென்றும் தெரிவித்தார்.
அவ்வாறு நினைக்கும் கூட்டமே, கறுப்புச் சட்டைக் கூட்டமென்று அவர் விமர்சித்தார்.
“எனக்குக் கொடுத்த அமைச்சுப் பதவியை, நாளையே தூக்கி எறிவேன். ஆனால், கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுபவர்கள், அதிலிருந்து வெளியே வரவேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து, கம்பனிக்கெதிராக போராட்டம் நடத்துவோமென அழைப்பு விடுத்தாலும், எவரும் வருகிறார்கள் இல்லை” என்றார்.
கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக, எத்தகைய பேச்சுவார்த்தைகளை நடத்தினாலும், 1,000 ரூபாய் சம்பளம் கிடைக்காதெனவும் 620 ரூபாயில் தான் சம்பளம் கைச்சாத்திடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
எனவே, தொழிற்சங்க பலத்தைத் தமக்கு தந்தால் நியாயமான சம்பளத்தைப் பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
42 minute ago
4 hours ago