2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கற்குவாரியில் வெடிப்பு; வெளிநாட்டுப் பிரஜை காயம்

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 11 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரயன்வச

பதுளை-பண்டாரவளை வீதி, தெமோதரயிலுள்ள கற்குவாரியில் ஏற்பட்ட வெடிப்பால், பிரான்ஸ் நாட்டுப் பிரஜையொருவர் படுகாயமடைந்த நிலையில், பதுளை வைத்தியசாலையில், நேற்று மாலை அனுமதிக்கப்பட்டதாக, பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தால் அதர்ச்சியடைந்த நிலையில், மேற்படி பிரஜையின் நண்பரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சாலி ரொப்ரோ (வயது 24) என்பவரே, இச்சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளார்.

மேற்படி கற்குவாரியில் வைக்கப்பட்ட வெடிபொருள் வெடித்ததால், பாரிய கல்லொன்று சுமார் 300 மீற்றர் தொலைவில் தூக்கி வீசப்பட்டுள்ளதுடன், அக்கல்லானது, கற்குவாரிக்கு அருகில் மோட்டார் சைக்களில் பயணித்துக்கொண்டிருந்த மேற்படி நபர் மீது பட்டதால், அவர் காயமடைந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

கற்குவாரியில் ஏற்பட்ட வெடிப்பால், அருகிலிருந்து தேயிலை தொழிற்சாலை அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகளும் சேதமடைந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .