Gavitha / 2021 ஜனவரி 05 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
மலையகத்தில் தற்போது தொடர்ச்சியாக நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக, கினிகத்தேனை, பிட்டவல கீ கியனாகெதர கிராமப் பகுதியில், பாரிய கல்லொன்று, நேற்று (04) இரவு சரிந்து விழுந்தமையால், அப்பகுதியிலுள்ள வீடென்று பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
இந்த வீட்டின் இரண்டு அறைகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் வீட்டிலிருந்த பொருள்களும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் இடம்பெறும்போது, இந்த வீட்டில் அறுவர் இருந்தனர் என்றும் அயலவர்களின் உதவியுடன் இவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், அங்கிருந்த குழந்தையோடு இருந்த தாய் சிறு காயங்களுக்கு உள்ளான நிலையில், கினிகத்தேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை, கிராம ஊடாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக, சம்பவத்தை நேரில் வந்து பார்வையிட்ட பொலிஸார் தெரிவித்தனர்.
8 hours ago
8 hours ago
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
17 Dec 2025