Editorial / 2018 ஜூன் 29 , பி.ப. 02:25 - 0 - {{hitsCtrl.values.hits}}





எஸ்.கணேசன், ஆர்.ரமேஸ்
ஹட்டன் கல்வி வலயத்தின் 65 பாடசாலைகளுக்கு, கற்றல் உபகரணங்களை வழங்கும் நிகழ்வு, ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரயில், நேற்று (28) நடைபெற்றது.
நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் பொதுச் செயலாளருமான ஆறுமுகனின் தொண்டமானின் பணிப்புரைக்கமைவாக, மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன..
மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் எம்.ரமேஷ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான ஏ.பி.சக்திவேல், ஏ.பிலிப்குமார், நோர்வூட் பிரதேச சபைத் தலைவர், கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .