2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

Freelancer   / 2023 ஜூலை 31 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.திவாகரன்

 நுவரெலியா பிரதேச செயலகத்தின் கீழ்,பொருளாதார ரீதியில் பின்தங்கிய இருபது  பாடசாலைகளைச் சேர்ந்த 7500 மாணவர்களுக்கு, அப்பியாச கொப்பிகள் திங்கட்கிழமை (31)  வழங்கிவைக்கப்பட்டன.

பெரெண்டினா நிறுவனத்தின் அறிவிச்சுடர் கல்வி மேம்பாட்டு செயல் திட்டத்தின் கீழ் இந்த நிகழ்வு  நுவரெலியா மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில்  இடம்பெற்றது.

இதில்,பிரதம விருந்தினராக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட கலந்து சிறப்பித்தார். மற்றும் நுவரெலியா வலயக்கல்வி  பணிப்பாளர் மற்றும் பெரெண்டினா நிறுவனத்தின் முகாமையாளர் மற்றும் சக உத்தியோகத்தர்கள் . அதிபர்கள் , ஆசிரியர்கள் , பாடசாலை மாணவர்கள்  என பலரும் கலந்து சிறப்பித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X