2025 ஜூலை 10, வியாழக்கிழமை

கலப்பட வியாபாரம்: இருவர் கைது

Editorial   / 2017 ஒக்டோபர் 14 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன்,மு.இராமச்சந்திரன் 

 ஹட்டன் -வில்பிரட் பகுதியில், வீடொன்றில் நீண்ட காலமாக சட்டவிரோதமாக கழிவு தேயிலை தூளுடன் நல்ல தேயிலை தூளை கலப்படம் செய்து வியாபார நடவடிக்கையில் ஈடுப்பட்டு வந்த உரிமையாளர் உட்பட இருவரை, ஹட்டன் பொலிஸார்,  நேற்று (13) மாலை கைது செய்துள்ளனர்.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்து பொலிஸார், குறித்த இருவரையும் கைது செய்துள்ளனர்.

 குறித்த இடத்தில் நீண்டகாலமாக கழிவு தேயிலை தூளுடன் நல்ல தேயிலைகளை கலப்படம் செய்து வியாபார நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளமை பொலிஸாரின் ஆரம்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இதன்போது, இந்த இடத்திலிருந்து 297 கிலோகிராம் கழிவு தேயிலை தூளுடன், தேயிலை தூளை சளிப்பதற்கு பயன்படுத்திய சல்லடை வகைகள், பொதி செய்யும் பொதிகள், அறைப்பதற்கு பயன்படுத்திய இயந்திரம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. 

குறித்த உரிமையாளர், ஹட்டன் - வில்பிரட்புர பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை, செவ்வாய்க்கிழமை (17) ஹட்டன் பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக, பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .