2025 ஜூலை 14, திங்கட்கிழமை

கலஹா சம்பவம் மேலும் ஐவர் கைது

Editorial   / 2018 ஒக்டோபர் 21 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த ஆகஸ்ட் மாதம் 28ஆம் திகதி கலஹா வைத்தியசாலையின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில் மேலும் 5 சந்தேகநபர்கள் இன்று (21) கலஹா பொலிஸாரல் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த ஐவரும் தெஹிவளை, எந்தலை ஆகிய பிரதேசங்களில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில், இதுவரை 12 பேர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கலஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தையொன்று உயிரிழந்ததையடுத்து, ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையால் பிரதேசவாசிகளால் வைத்தியசாலை சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டது. இதனால்  கடந்த 2 மாதங்களாக கலஹா வைத்தியசாலை மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .