2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

கலஹா விவகாரம்; மன்னிப்புக் கோரத் தயார்

மொஹொமட் ஆஸிக்   / 2018 ஒக்டோபர் 16 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கலஹா வைத்தியசாலையின் மீது தாக்குதல் மேற்கொண்டது தவறென்பதை, பிரதேச மக்கள் உணர்ந்துகொண்டுள்ளனர் எனத் தெரிவித்த அகில இலங்கை குருமார் சங்கத்தின் கண்டி கிளையின் தலைவரான சுந்தரராஜன் பிரபாஹர் குருக்கள், எனவே தாக்குதல் சம்பவத்துக்காக, வைத்தியரிடமும் சம்பந்தப்பட்டவர்களிடமும் மன்னிப்புக் கோருவதற்கு, பிரதேச மக்கள் முன்வந்துள்ளனர் என்றும், எனவே, கலஹா வைத்தியசாலையைத் திறப்பதற்கு அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.  

கண்டி டெவோன் ரெஸ்டில், நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆண் குழந்தை உயிரிழந்ததையடுத்து நடந்த சம்பவத்தை  நினைவூட்டியதுடன், இதையடுத்தே, வைத்தியசாலை மூடப்பட்டதாகவும் தெரிவித்தார். 

இந்தச் சம்பவத்தின் பாரதூரத்தைப் பிரதேச மக்கள் உணர்ந்துகொண்டுள்ளனர் என்றும் தெரிவித்த அவர், அன்று அவசர நோயாளிகள் இருவரை மேலதிக சிகிச்சைக்காக மற்றுமொரு வைத்தியசாலைக்கு ஏற்றிச் சென்ற அம்பியுலன்ஸ் வண்டி வரும்வரை காத்திருக்க வேண்டி ஏற்பட்டதால், குழந்தையின் மரணம் சம்பவித்துள்ளதாகவும் எனவே, இதில் வைத்தியரின் பிழை ஒன்றும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .