Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூலை 11 , மு.ப. 09:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
சிறுவர் விவகார முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பிரேரணை, நுவரெலியா பிரதேச சபையில் நிராகரிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா பிரதேச சபைக் கூட்டம், கந்தப்பளை சனசமூக நிலையத்தில், பிரதேச சபைத் தவிசாளர் வேலு யோகராஜ் தலைமையில் நேற்று (10) இடம்பெற்றது.
கூட்டத்தில் கலந்துகொண்ட நுவரெலியா மாநகர சபையின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரான விமாலி கருணாரத்ன, அவருக்கு ஒதுக்கப்பட்ட கருத்துகள் தெரிவிக்கும் நேரத்தில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிரான பிரேரணையை முன்வைத்தார்.
இந்தப் பிரேரணையே சபையின் உறுப்பினர்கள் முற்றுமுழுதாக நிராகரித்துள்ளனர்.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் இனவாதத்தைத் தூண்டுபவர்களை, வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்து, பிரேரணை ஒன்றை, சபையின் உறுப்பினர்கள் கட்சி பேதமின்றி ஏகமனதாக நிறைவேற்றியமையும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .