Gavitha / 2020 நவம்பர் 26 , பி.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.சந்ரு
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கந்தவத்தையில், 12 குடும்பங்களைச் சேர்ந்த 64 பேர், இன்று (26) முதல் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர், கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான இளைஞன் ஒருவர், இப்பகுதிக்கு வந்து, தனது நண்பர்களுடன் சேர்ந்து விளையாட்டுப் போட்டியொன்றில் பங்குற்றிருந்தார் என்றும் இதனாலேயே, இப்பகுதியிலுள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, இந்த விளையாட்டுப் போட்டியில் பங்குற்றவர்கள், தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ளுமாறும் இது குறித்து சுகாதார அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு, எதிர்வரம் 9ஆம் திகதி, பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது என்றும் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
22 Jan 2026
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Jan 2026
22 Jan 2026