2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கல்வி அளவீடும் மதிப்பீடும் நூல் காத்திரமான கல்விப் படைப்பாகும்

Freelancer   / 2023 மார்ச் 27 , பி.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெய்யன்

பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி M. கிருஸ்ணகுமாரின் “கல்வி அளவீடும் மதிப்பீடும்” நூலின் இரண்டாம் பதிப்பு  காத்திரமான கல்விப் படைப்பாக வெளிவந்துள்ளது. காலத்திற்குத் தேவையான கல்வியியல் மாற்றங்களை தமது இரண்டாம் பதிப்பில் இழையோட விட்டிருக்கிறார் மு.கிருஷ்ணகுமார்.

t-test, chi-square test, ANOVA, Correlation,Regression போன்ற ஆய்வுக்கான புள்ளிவிபரவியலையும் உள்ளடக்கிய இந்நூலானது, கற்பித்தலில் தேசிய டிப்ளோமா, கல்விமாணி, பட்டமேற் கல்வி டிப்ளோமா, கல்வியியல் முதுமாணி போன்ற கற்கைநெறிகளில் கல்வி அளவீடும் மதிப்பீடும் எனும் பாடத்தை பயில்வோருக்கும், Mphil , PhD எனும் கற்கைநெறிகளுக்கான ஆய்வுகளை மேற்கொள்வோருக்கும் மிகுந்த பயனுடையதாக அமையும்.

கலைமாணி பட்டப்படிப்பை பேராதனை பல்கலைக்கழகத்தில் முடித்துக்கொண்ட இவர் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்கல்வி டிப்ளோமா சிறப்பு சித்தியைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

சிறந்த ஆய்வினைப் பெற்றுக்கொண்டமைக்கான விசேட விருதுடன் கல்வியியல் முதுமாணிப் பட்டத்தினை அதே பல்கலைக்கழகத்திலேயே பெற்றுக்கொண்டுள்ளார்.

பட்ட மேற் கல்வி முகாமைத்துவ டிப்ளோமாவை தேசிய கல்வி நிறுவனத்தில் முடித்துக்கொண்டு கம்போடிய IIC பல்கலைக்கழகத்தில் வகுப்புச்சித்தியுடன் கல்வியியல் கலாநிதிப் பட்டத்தினைப் பெற்றுள்ளார்.

கொட்டகலை யதன்சைட் தமிழ் மகா வித்தியாலயத்தில் கணித பாட ஆசிரியராகவும் நுவரெலிய கல்வி வலய சேவைக்கால ஆசிரிய ஆலோசகராகவும் திகழ்ந்த இவர் இலங்கை திறந்த பல்கலைக் கழக ஹட்டன் கற்கை நிலையத்தில் வருகைதரும் விரிவுரையாளராகவும் கடந்த பன்னிரண்டு வருட காலமாகவும் பணியாற்றி வருகிறார்.

கல்விப் பசிக்கு காத்திரமான படைப்பாக வெளிவந்திருக்கும் நூலை கல்விப்புலத்தோர் தமது கல்விப் பயணத்திற்கு துணையாகக் கொள்ளலாம்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X