2025 மே 14, புதன்கிழமை

கல்விசார் சமூகத்தை கட்டியெழுப்பும் A+ செயற்றிட்டம்

Freelancer   / 2023 மார்ச் 17 , மு.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்விசார் சமூகத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில், லங்கா விஷன் எக்சன் பவுண்டேசன் மற்றும் நண்பன் பவுண்டேசன் அமைப்பின் ஏற்பாட்டில், “Project A+” எனும் செயற்றிட்டம், ஹட்டன் - லெதண்டி தோட்டத்தில் அண்மையில்  ஆரம்பிக்கப்பட்டது.

புரொஜெக்ட் A+ வேலைத்திட்டமானது, மலையகத்தில் பின்தங்கிய பகுதிகளில் அடிப்படை கல்வியைத் தொடர சிரமபடும் மாணவ, மாணவிகளின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக, மேலதிக மாலை நேர வகுப்பாக இவ்வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

அந்த வகையில், இவ்வேலைத்திட்டத்தில் குறித்த பிரதேசங்களை சேர்ந்த தகுதியுள்ள ஆசிரியர்களின் மூலம் விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம் மற்றும் தமிழ் உள்ளிட்ட பாடங்களும் இலவசமாக கற்பிக்கப்படுகிறது.

இவ் ஆரம்ப நிகழ்வில் லங்கா விஷன் எக்சன் பவுண்டேசன் நிறுவனத்தின் தலைமை இயக்க மேலாளர் தியாகராஜா யுவராஜன் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர்களான மூர்த்தி சதீஷ் கண்ணா, டியா செர்லின், குறித்த தோட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர் மற்றும் பிரதேச மக்களும், பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X