Freelancer / 2021 ஜூலை 10 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.ஏ.எம்.பாயிஸ்)
இரத்தினபுரி மற்றும் சுற்று பிரதேசங்களில் மழை காரணமாக நேற்று அதிகாலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக வடிகாலமைப்பு திணைக்களத்தில் இரத்தினபுரி காரியாலயம் தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி நகரின் பொலிஸ் நிலையம் உட்பட இ/அல் மக்கிய்யா முஸ்லிம் மகா வித்தியாலயம் மற்றும் நகரின் முக்கிய கட்டிடங்கள் நீரில் மூழ்கியுள்ளன. அத்துடன் குருவிட்ட எஹலியகொடை, கலவான, பெல்மதுளை, கிரியெல்ல, எலபாத்த பிரதேச செயலாளர் பிரிவுகளின் தாழ் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
களுகங்கை உட்பட இதன் துணை ஆறுகளான குருகங்கை, வேகங்கை, குகுலேகங்க, கலதுரகங்கை, தெனவக நிரிஎலி கங்கை ஆகியனவும் பெருக்கெடுத்துள்ளன.
மேலும் சுற்றுப் பிரதேச பண்டாரநாயக வீதி, ஆற்றங்கரை வீதி, போதிராஜ வீதி, பட்டுகெதர புளுங்குபிட்டிய, திருவானாகெட்டிய, கொடிகமுவ, முவகம, அங்கம்மன வெரலுப உட்பட களுகங்கையின் கரையோர கிராமங்களின் தாழ் நிலங்கள் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளன.
நேற்றுக் காலை களுகங்கையின் நீர்மட்டம் 7.86 மீற்றர் ஆக காணப்பட்டதுடன், இந்நிலைமை 9.5 மீற்றர் ஆக உயர்ந்தால் பெரு வெள்ளப்பெருக்கு ஏற்படும் எனவும், இம்மட்டம் 11.5 ஆக உயர்ந்தால் வெள்ளப்பெருக்கு ஆபத்தான மட்டத்தை அடையும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
M
7 hours ago
8 hours ago
20 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
20 Jan 2026