2025 ஜூலை 10, வியாழக்கிழமை

கழிவுத் தேயிலைத் தூளுடன் இருவர் கைது

மு.இராமச்சந்திரன்   / 2017 ஒக்டோபர் 13 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன் 

அக்கரப்பத்தனை பகுதியிலிருந்து டிக்கோயா பட்டல்கலைக்கு, சுமார் 7,500 கிலோ கிராம் கழிவுத் தேயிலைத் தூளைக் கொண்டுசென்ற இருவரை, ஹட்டன் - டிக்கோயா பகுதியில் வைத்து கைதுசெய்துள்ளதாக, ஹட்டன் டிக்கோயா பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று மாலை 6.30 மணியளவில், அட்டன் – டிக்கோயா பகுதியில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாகனமும் கைப்பற்றப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருவரையும் ஹட்டன் நீதவான் முன்னிலையில் இன்று (13) ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாக அட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .