R.Maheshwary / 2022 ஓகஸ்ட் 01 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமணசிறி குணதிலக
கழுத்தில் கத்தியை வைத்து அச்சுறுத்தி 4,92,000 ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரந்தெனியவத்த பிரதேச வீடொன்றில் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.
நேற்று முன்தினம் (30) இரவு 8 மணியளவில் குறித்த வீட்டுக்குள் நுழைந்த இளைஞர்கள் இருவர், வீட்டு உரிமையாளரின் கழுத்தில் கத்தியை வைத்து, அச்சுறுத்தி தங்க நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக வெள்ளவாய பொலிஸார் தெரிவித்தனர்.
டிப்போவில் கடமையாற்றும் 53 வயதுடைய வீட்டு உரிமையாளர், இரவு 8 மணியளவில் வீட்டுக்கு முன்பாக மோட்டார் சைக்கிள் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளதை கண்டு அவர்களிடம் வினவியுள்ளார்.
இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள், தமது மோட்டார் சைக்களில் எரிபொருள் முடிந்து விட்டதாகவும் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள வெற்றுப் போத்தல் ஒன்று தேவை என்றும் கூறியுள்ளனர்.
இதன்போது குறித்த நபர், போத்தலை எடுப்பதற்காக வீட்டின் பின்புறத்தே சென்ற போது, குறித்த இளைஞர்கள் அந்த நபரின் கழுத்தில் கத்தியை வைத்து,அவரது கழுத்திலிருந்த தங்க சங்கிலி, கைசங்கிலி என்பவற்றை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
5 minute ago
5 minute ago
11 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
5 minute ago
11 minute ago
1 hours ago