2025 ஜூலை 07, திங்கட்கிழமை

கஹாவத்த துப்பாக்கிச்சூடு; வழக்கு ஒத்திவைப்பு

Kogilavani   / 2017 ஒக்டோபர் 31 , பி.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி கஹாவத்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை, எதிர்வரும் டிசெம்பர் மாதம் 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது,​ பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக, இரத்தினபுரி - கஹாவத்த பிரதேசத்தில் நடத்தப்பட்ட பிரசாரக்கூட்டத்தில், மேடை அமைத்துக் கொண்டிருந்த மூவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என, சப்ரகமுவ மாகாண அமைச்சர் நிலந்த ஜயசிங்க, கஹாவத்த பிரதேச சபையின் முன்னாள் தலைவர் மாணிக்க வடுகே வஜிர தர்சன டி சில்வா உள்ளிட்ட ஏழு பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பிலான வழக்கு, இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தில் இன்று(31) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்தது.

எனினும், நீதிபதி ரொஹான் ஜயவர்தன விடுமுறையில் சென்றதால், எதிர்வரும் டிசெம்பர் 13ஆம் திகதிக்கு, வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .