2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

காசல்ரீயில் சிரமதானம்

Editorial   / 2018 ஒக்டோபர் 07 , பி.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதிஸ், எஸ்.கணேசன்

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் குவிந்துகிடந்த குப்பைகளை அகற்றும் சிரமதானம், நேற்று  முன்னெடுக்கப்பட்டது.

மேற்படி நீர்த்தேக்கத்தில், குப்பைகள் குவிந்து கிடப்பதால், சூழல் மாசடைவு ஏற்பட்டிருந்ததோடு, களனி கங்கைக்குச் செல்லும் இந்த நீர், அதிகளவு மாசடைவதாகவும், அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இதனைக் கருத்திற்கொண்டே, நீர்த்தேக்கத்தின் கரையோரப் பகுதிகளிலும் நீரேந்தும் பகுதிகளிலும் குவிந்துக் கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டனவென, அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹட்டன், நோர்வூட் பொலிஸார், சிவில் அமைப்பினர், கடற்படையினர், இராணுவத்தினர், சுகாதாரப் பரிசோதகர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து, இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .