R.Maheshwary / 2021 டிசெம்பர் 01 , பி.ப. 02:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேஹ்ன செனவிரத்ன
நல்லதண்ணி பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் சார்ஜன்டாக கடமையாற்றிய ஒருவர், கடமைகள் முடிந்து கெலிஓயா பிரதேசத்திலுள்ள தனது வீட்டுக்குத் திரும்பிய நிலையில் காணாமல் போன அவரது சடலம், மகாவலி கங்கையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 3 பிள்ளைகளின் தந்தையான 55 வயதுடைய சமரநாயக்க என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் ( 29) தனது கடமைகளை முடித்துக்கொண்டு கெலிஓயா நகருக்கு வருகைத் தந்த அவர், அதிகம் மழை காரணமாக வீட்டுக்கு வருவதற்கு தாமதமாகும் என வீட்டாருக்கு அலைபேசி ஊடாக அறிவித்த பின்னர், அவருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று (30) இராணுவத்தினரின் உதவியுடன் பேராதனை பொலிஸார் மகாவலி கங்கையில் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்த போது, குறித்த சார்ஜனின் பயணப் பை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், இன்று (1) அவரது சடலமும் மீட்கப்பட்டுள்ளது.
5 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
8 hours ago