Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 ஓகஸ்ட் 23 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன், எஸ்.சதிஸ், காமினி பண்டார
மஸ்கெலியா சூரியகந்த தோட்டத்திலிருந்து, கடந்த 18ஆம் திகதி காணாமல் போனதாகக் கூறப்படும் முச்சக்கர வண்டியை, பலாங்கொடை கல்தோட்டயிலிருந்து, செவ்வாய்க்கிழமை மீட்டுள்ளதாக தெரிவித்த மஸ்கெலியா பொலிஸார், சந்தேகத்தின் பேரில் மூவரை கைதுசெய்துள்ளதுடன், கடத்தல் சம்பவத்துக்கு பயன்படுத்தியதாகக் கூறப்படும் மற்றுமொரு முச்சக்கர வண்டியையும் மீட்டுள்ளனர்.
மஸ்கெலியா சூரியகந்த தோட்டத்தில், வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது முச்சக்கர வண்டி திருடப்பட்டதாக, முச்சக்கர வண்டியின் உரிமையாளர், மஸ்கெலியா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார், கிடைக்கப்பெற்றத் தகவலுக்கு அமைய, பலாங்கொடை கல்தோட்டயிலுள்ள வீடொன்றுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், மேற்படி முச்சக்கர வண்டியை மீட்டுள்ளனதுடன், சந்தேகத்தின் பேரில் மூவரைக் கைதுசெய்துள்ளனர்.
கடத்தல் சம்பவத்தின் பிரதான சந்தேக நபரால், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர், குறித்த முச்சக்கரவண்டி மஸ்கெலியா கல்கந்த தோட்டதைச் தேர்ந்த நபருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை, விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
மேற்படி நபர், இவ்வாறு முச்சக்கரவண்டிகளை விற்பனை செய்வதும் மீண்டும் கொள்ளையடித்து வேறு நபர்களுக்கு விற்பனை செய்வதுமென, தொடர்ச்சியாக இச்செயற்பாட்டில் ஈடுபட்டு வந்தவரென்று, ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
முச்சக்கர வண்டிகளுடன் மேற்படி மூவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
39 minute ago
20 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
20 Jul 2025