2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

காணாமல்போன எரிவாயு சிலிண்டர்கள்

Freelancer   / 2022 மே 30 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன் 

ஹட்டனில் உள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனை நிலையத்திற்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த எரிவாயு சிலிண்டர்கள் காணாமல் போயுள்ளன.

சமையல் எரிவாயு சிலிண்டரை பெற்றுக்கொள்ளும் வகையில் இரவு பகலாக எரிவாயு சிலிண்டர் விற்பனை நிலையத்திற்கு முன்னால் எரிவாயு சிலிண்டர்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

இவ்வாறு வைக்கப்பட்டிருந்த எரிவாயு சிலிண்டர்களே காணாமல் போயுள்ளன.

இதேவேளை, சிலிண்டர் ஒன்றை பாதுகாப்பதற்கு ஒருவரிடம் இருந்து தலா 50 ரூபாவை குறித்த நபர்கள் அறவிட்டு வந்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறான சூழ்நிலையிலேயே எரிவாயு சிலிண்டர்கள் காணாமல் போயுள்ளன.

இதற்கு பொறுப்பு கூறுவதற்கும் யாரும் இல்லாத நிலைமை காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X