2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

காதலி துஷ்பிரயோகம் காதலன் கைது

Freelancer   / 2023 பெப்ரவரி 22 , மு.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமணசிறி குணத்திலக்க

10 வகுப்பில் கல்விப்பயிலும் 15 வயதான தன்னுடைய காதலியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், அவருடைய காதலன் கைது செய்யப்பட்டுள்ளார் என தனமன்வில பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 18ஆம் திகதி காலை, டிமோ பட்டா லொறியில் காதலியின் வீட்டுக்கு வந்த காதலன், அந்த வாகனத்தில் காதலியை ஏற்றிக்கொண்டு தூரத்திலுள்ள பாழடைந்த வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு வைத்தே காதலியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார். இதுதொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் காதலன் கைது செய்யப்பட்டார். வைத்தியசாலையில் காதலி அனுமதிக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X