Freelancer / 2023 ஏப்ரல் 19 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
15 வயதும் 2 மாதங்களானசிறுமியை, சட்டரீதியான பொறுப்பாளர்களிடம் இருந்து பிரித்து துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்றக்குற்றச்சாட்டின் கீழ் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொனராகலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ள இந்தசம்பவத்தில், 15 வயதான சிறுமியை தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச்சென்றே அவ்விளைஞன் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
அவ்விளைஞன், அச்சிறுமியுடன் காதல் உறவில் இருந்துள்ளார் என்பது கண்டறியப்பட்டது. அச்சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அயலில் வசிக்கும் ஒருவர் தன்னை 8 வயதில் துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
சம்பவங்கள் தொடர்பில் அவருடைய 19 வயதான காதலனும், சிறியவயதில் துஷ்பிரயோகம் செய்தார் என சந்தேகிக்கப்படும் 28 வயதான நபரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வைத்திய பரிசோதனைக்காக அச்சிறுமி, மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்நபர்களை சியம்பலாண்டு வநீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்தனர்.
சுமணசிறிகுணதிலக்க
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago