2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

காதலியைப் பார்க்க பஸ்ஸை ஓட்டிய நடத்துனர் சிக்கினார்

R.Maheshwary   / 2023 பெப்ரவரி 15 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷேன் செனவிரத்ன

ரம்புக்கனை டிப்போவுக்கு உரிய  பஸ் ஒன்றை ஹதரலியத்த பஸ் நிலையத்தில் இரவு நேரத்தில் நிறுத்தி விட்டு, சாரதி வீட்டுக்குச் சென்ற நிலையில்,  பஸ்ஸின் நடத்துனர் தனது காதலியைப் பார்க்க அந்த பஸ்ஸை எடுத்துச் சென்ற போது, அந்த பஸ் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனையடுத்து  பஸ்ஸை எடுத்துச் சென்ற நடத்துனர், ஹதரலியத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மறுநாள் அதிகாலை 5.30 மணியளவில் மீண்டும் ரம்புக்கனைக்கான பயணத்தை ஆரம்பிப்பதற்காக குறித்த பஸ் சாரதியால் ஹதரலியத்த பஸ் தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டதுடன், நடத்துனரும் பஸ்ஸிலேயே தூங்கியுள்ளார்.

சாரதி அங்கிருந்து சென்றதும் நடத்துனர் பஸ்ஸை எடுத்துக்கொண்டு, சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கெபெல்லாவத்த என்ற இடத்துக்குச் சென்று  தனது காதலியைப் பார்த்து விட்டு  திரும்பிய போது பஸ் விபத்துக்குள்ளாகியுள்ளது.

 இதனையடுத்து நடத்துனரை கைதுசெய்து விசாரணை செய்த போது, அவர் தனது தவறை ஒத்துக்கொண்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X