Editorial / 2018 ஏப்ரல் 01 , பி.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன்
கார் வாங்கியமைக்காக, நண்பர்களுக்கு விருந்து கொடுத்த இளைஞன், மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார் என்று நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹோட்டலொன்றின் மாடியிலிருந்த விழுந்த 26 வயதுடைய இளைஞனே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனியார் வங்கியொன்றில் கடமையாற்றும் இளைஞன், புதிய காரொன்றை கொள்வனவு செய்தமையால், கடந்த 26ஆம் திகதி, லக்ஷபான நீர்வீழ்ச்சி பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில், நண்பர்களுக்கு விருந்து வழங்கியுள்ளார்.
இதன்போது, அவர், குறித்த ஹோட்டலின் மேல் மாடியிலிருந்த கீழே விழுந்ததையடுத்து, படுகாயமடைந்த நிலையில், லக்ஷபான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
இந்நிலையிலேயே, சிகிச்சை பலனின்றி, அவர், நேற்று (01) அதிகாலை உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை, பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago