Janu / 2025 மே 15 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியாவில் இருந்து தலவாக்கலை சென்க்ளேர் தோட்டத்தை நோக்கி அதி வேகமாக பயணித்த காரொன்று மலையில் மோதி விபத்துக்குள்ளானதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதி லிந்துலை, மல்லியப்பு பகுதியில் புதன்கிழமை (14) மாலை இடம்பெற்றுள்ளது.
சட்டத்தரணி ஒருவர் செலுத்திய காரே இவ்வாறு வேகக் கட்டுப்பாட்டை இழந்து மலையில் மோதியதாகவும் விபத்தில் சட்டத்தரணிக்கு காயம் ஏற்படவில்லை, என்றாலும் கார் பலத்த சேதமடைந்துள்ளது என லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட சட்டத்தரணிக்கு எதிராக நுவரெலியா உயர் நீதிமன்றத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ரஞ்சித் ராஜபக்ஷ

20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025