2026 ஏப்ரல் 24, வெள்ளிக்கிழமை

“காவத்தை சம்பவம் மிலேட்சத்தனமானது”

Janu   / 2026 ஏப்ரல் 22 , பி.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

காவத்தை பகுதியில் இடம்பெற்ற சம்பவம் மிலேட்சத்தனமானது என தோட்ட உட்கட்டமைப்பு முன்னாள் அமைச்சரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது:

"காவத்தை, நீலகாமம் தோட்டம் முதலாம் பிரிவில் உள்ள மலையக குடியிருப்பொன்றிற்குள் மர்ம கும்பல் ஒன்று புகுந்து தாக்குதல் நடத்தி அதனை சேதப்படுத்தியுள்ளது. இந்த செயல் மிலேட்சத்தனமானது. இதனை நான் வன்மையாக கண்டிப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இத்தகைய சம்பவங்கள் இரத்தினபுரி மாவட்டத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன; இது முதன்முறை அல்ல. ஒரு சம்பவம் நடக்கும்போது 'நடவடிக்கை எடுக்கப்படும்' எனக் கூறுவதும், பின்னர் அதனை அப்படியே கிடப்பில் போடுவதும் வழக்கமாகிவிட்டது.

எனவே, இது குறித்து முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இனிவரும் காலங்களில் இத்தகைய செயல்கள் மீண்டும் நிகழாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும். தோட்ட நிர்வாகங்கள் இவ்வாறான மிலேட்சத்தனமான செயல்களை  நிறுத்த வேண்டும் " என்றார்.

 செ.தி.பெருமாள்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .