Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
R.Maheshwary / 2023 ஜனவரி 19 , மு.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
World Unreached people missions பூரண அனுசரணையில் கொரிய நாட்டில் இருந்து அன்பளிப்பாக கிடைக்கபெற்ற 43 கோடி ரூபாய் பெறுமதியான மருந்துப் பொருட்கள் நேற்று முன்தினம் (17) சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டது.
நாட்டின் பல பிரதேசங்களில் மருத்துவ பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவும் சூழ்நிலையில், வைத்திய அதிகாரிகளும் சுகாதாரத்துறை சார்ந்த பணியாளர்களும் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் நோயாளிகள் பல இன்னல்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய துர்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இவற்றைக் கருத்தில் கொண்டு போதகர் பிரான்சிஸ் மற்றும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் பயனாக 43 கோடி ரூபாய் பெருமதியான மருந்து பொருட்கள் மற்றும் நவீன மருத்துவ சாதனங்கள் கொரிய நாட்டில் இருந்து இலங்கைக்கு வரவழைக்கப்பட்டது.
இவ் மருத்துவ பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் சுகாதார அமைச்சில் சுகாதார அமைச்சரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
பெருந்தோட்டத்தை சார்ந்த வைத்தியசாலைகளுக்கு மருந்து பொருட்கள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago