R.Maheshwary / 2022 ஜனவரி 13 , மு.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். செல்வராஜா
இலங்கை பொலிஸ் சேவையில் பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிள் பதவிக்கு, இலங்கைப் பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
ஆகவே கிடைத்திருக்கும் இவ்வறிய சந்தர்ப்பத்தினை எமது சமூக இளைஞர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ளும்படி, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் கேட்டுள்ளார்.
இது குறித்து, பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே, அவர் மேற்படி கோரிக்கையை விடுத்துள்ளார்.
எனவே இதற்காக கோரப்பட்டுள்ள தகுதிகளைக் கொண்ட இளைஞர்கள், பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவங்களை எதிர்வரும் 31.01.2022க்கு முன்பதாக பணிப்பாளபயிலுனர் ஆட்சேர்ப்புப் பகுதி, இல. 375,1ஆம் மாடி, ஸ்ரீசம்புத்தத்வ ஜயந்தி மாவத்தை, கொழும்பு -06. என்ற முகவரிக்கு பதிவுத்தபாலில் அனுப்பப்படல் வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே கிடைத்திருக்கும் இச்சந்தர்ப்பத்தை எமது சமூக இளைஞர்கள் கிரமமாகவும், முறையாகவும் பயன்படுத்திக் கொள்ளல் வேண்டும் என தெரிவித்துள்ள அவர், சேவைக்கு விண்ணப்பிப்பவர்கள் இல.19, பதுளுப்பிட்டிய ரோட், பதுளைப் பணியகத்தினர் மூலம் ஆலோசனைகள், மற்றும் அறிவுறுத்தல்களை பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
36 minute ago
36 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
36 minute ago
2 hours ago