Janu / 2026 ஜனவரி 29 , மு.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
ருவன்வெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோனகல பகுதியில் 17 வயதுடைய சிறுவன் தனது வீட்டிற்கு அருகிலுள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து உயிரிழந்து கிடந்த நிலையில் புதன்கிழமை (28) மாலை மீட்கப்பட்டுள்ளார்.
அதே பகுதியைச் சேர்ந்த கோனகல வித்தியாலயத்தில் கல்வி கற்கும் ரந்தில் கவிந்து சபுசத என்றவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது.
குறித்த சிறுவனின் தாய் 28ஆம் திகதி மாலை மெதகொட பொலிஸ் சாவடியில் இது தொடர்பாக முறைப்பாடு செய்ததையடுத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிறுவனின் சடலம் அமிதிரிகல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகள் அவிசாவளை மாவட்ட வைத்தியசாலையில் நடைப்பெறவுள்ளது.
என். ஆரச்சி

3 hours ago
4 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago
7 hours ago