2025 மே 05, திங்கட்கிழமை

கினிகத்தேனையில் எட்டு பேருக்கு கொரோனா

Gavitha   / 2020 நவம்பர் 26 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா, ஆ.ரமேஷ்

கினிகத்தேனையில், ஒரே குடும்பத்தில், மூன்று வயது குழந்தை உள்ளிட்ட ஐவருக்கும் மேலும் கினிகத்தேன பகுதியைச் சேர்ந்த நால்வருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கினிகத்தேனை, ஹிட்டிகேகம பகுதியிலுள்ளவர்களுக்கு, சமீபத்தில் மேற்கொண்ட பிசிஆர் பரிசோதனையின் போதே, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றுக்கு உள்ளான மூன்று வயது குழந்தையின் தாய், கொழும்பிலிருந்து வந்தபோது, அவருக்கு கினிகத்தேன கலுகல பொலிஸ் சோதனை சாவடியில் வைத்து, பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது, அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

அவரை மாத்தறை சுயதனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின்னர் அவரது குடும்பத்திலுள்ள குழந்தை உள்ளிட்ட நால்வருக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்ட போதே, அவர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த நால்வரும், சுய தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர் என, அம்பகமுவ பொது சுகாதார காரியாலய பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

இதேவேளை, அம்பகமுவ பிரதேச செலயகத்துக்குட்பட்ட பகுதியில், மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பொலிஸ் சார்ஜன்ட ஒருவரும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள், ஹம்பாந்தோட்டையிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X