R.Maheshwary / 2021 நவம்பர் 11 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா
கினிகத்தேனை- பகத்துல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இங்கிரிய பகுதியை சேர்ந்த 46 வயதுடைய விஜயகுமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஹட்டனிலிருந்து மாத்தளை நோக்கிச்சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான திருத்தப்பணி பஸ்ஸும் நாவலப்பிட்டியிலிருந்து பிலியந்தலை பகுதிக்கு சென்ற கனரக லொறியொன்றுமே பகத்துல பாலத்தில் இன்று (11) காலை 6.45 மணியளவில் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
விபத்தில் காயமுற்ற லொறியின் சாரதி படுகாயமடைந்து நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
19 minute ago
28 minute ago
45 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
28 minute ago
45 minute ago
2 hours ago