2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

கிரகரி வாவியில் மிதக்கும் சடலம் யாருடையது தெரியுமா?

Editorial   / 2026 ஏப்ரல் 06 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கிரகரி வாவியில்  இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் இன்று (06) திங்கட்கிழமை காலை மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை கிரகரி வாவியில் படகு சவாரியில் ஈடுபட்டிருந்தவர்கள், நீரில் சடலமொன்று மிதப்பதைக் கண்டு பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

தகவலின் அடிப்படையில் நுவரெலியா பொலிஸார் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நுவரெலியா மாவட்ட நீதவான் சம்பவ இடத்திற்கு வருகை தந்து சடலத்தைப் பார்வையிட்டதன் பின்னரே, சடலம் வாவியிலிருந்து மீட்கப்பட்டு மேலதிக நடவடிக்கைகளுக்காகக் கொண்டு செல்லப்படும் எனப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த நபர் வாவியில் குதித்து தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது எவராவது அவரைக் கொலை செய்து வாவியில் வீசிச் சென்றார்களா? என்பது குறித்துப் பொலிஸார் பல கோணங்களில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மரண விசாரணைகளின் பின்னர், சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இச்சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், உயிரிழந்தவர் தொடர்பான விபரங்களைச் சேகரிக்கப் பொலிஸார் பொதுமக்களின் உதவியையும் நாடியுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .