Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Editorial / 2020 நவம்பர் 08 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேன் செனவிரத்ன
கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிராமிய வைத்தியசாலையின் வைத்தியர், தாதியர்கள், பணியாளர்கள் உள்ளடங்களாக 16 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று, பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
மேற்படி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நோயாளர் ஒருவருக்கு, கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டதையடுத்தே, வைத்தியசாலையை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வைத்தியசாலையை அண்மித்து அமைந்துள்ள மருந்தகங்கள் சிலவும் மூடப்பட்டுள்ளதுடன், மருந்தகங்களில் பணியாற்றியவர்களையும் தனிமைப்படுத்தியுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் மேலும் தெரிவித்தனர்.
குறித்த தொற்றாளர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதுடன், பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தியுள்ளார் என்றும் எனவே அவர் பயணித்த பஸ் மற்றும் பயணிகளின் விவரங்களைப் பெற்றுக்கொள்வதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
7 hours ago