2026 ஜனவரி 23, வெள்ளிக்கிழமை

கிருஸ்லஸ்பாம் வித்தியாலய நடவடிக்கைகள் ஸதம்பிதம்

Kogilavani   / 2020 டிசெம்பர் 03 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா

கொட்டகலை கிருஸ்லஸ்பாமில், நேற்று  (2) கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இருவர் இனங்காணப்பட்டதையடுத்து, கிருஸ்லஸ்பாம் தமிழ் வித்தியாலயத்தின் கற்றல் நடவடிக்கைகள், இன்று (3) முற்றாக ஸ்தம்பிதம் அடைந்ததாகக் வித்தியாலயத்தின் அதிபர் வி.அமிர்தலிங்கம் தெரிவித்தார்.

இன்றைய தினம் பாடசாலைக்கு ஆசிரியர்கள் யாரும் சமூகமளிக்கவில்லை என்றுத் தெரிவித்த அதிபர், 301 மாணவர்களில் 30 மாணவர்களே பாடசாலைக்கு சமூகமளித்தனர் என்றும் தெரிவித்தார்.

இங்கு கடமையாற்றும் ஆசிரியர்கள் 19 பேரும், சுகவீன விடுமுறைக்கான கடிதங்களை அனுப்பி வைத்தனர் என்றும் தெரிவித்தார். 

நுவரெலியா வலய கல்விப் பணிமனையின் ஆலோசனைக்கமைய குறித்த மாணவர்களை 10 மணியளவில் வீடுகளுக்கு அனுப்பி வைத்ததாகவும் இன்றைய(4) தினம் வழமையை போன்று பாடசாலையின் கற்பித்தல் நடவடிக்கை இடம்பெறும் என்று தான் நம்பிக்கைக் கொண்டுள்ளதாகவும் அதிபர் மேலும் தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X