R.Maheshwary / 2021 நவம்பர் 14 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீலமேகம் பிரசாந்த்
கொட்டக்கலை பிரதேச சபைக்கு உட்பட்ட கிறிஸ்லஸ்பார்ம் தோட்டத்தின் தொழிற்சாலை கடந்த ஒரு வருடமாக, மூடப்பட்டுள்ளமைக்கு எதிராக, கடந்த இரண்டு நாட்களாக தோட்டத்தொழிலாளர்கள் பணிபகிஸ்கரிப்பில் ஈடுட்டனர்.
இவ்விடயம் தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபத்தலைவரும் முன்னாள் மத்தியமாகாண சபை உறுப்பினருமான பழனி சக்திவேல் தலைமையிலான குழு, குறித்த தோட்டத்திற்குச் சென்று தோட்ட முகாமையாளருடன் கலந்துரையாடி இதற்கான தீர்வை பெற்றுக்கொடுத்துள்ளனர்.
இதனடிப்படையில் தோட்டத்தொழிற்சாலை இயந்திரங்கள் பழுதடைந்துள்ளதாகவும் புதிய இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் இன்னும் 25 நாட்களில் அவற்றை உரிய முறையில் பொறுத்தி, மீண்டும் தொழிற்சாலையை திறக்க நடவடிக்கை எடுக்கப்படுமென தோட்ட. முகாமையாளர் சில்வா கடிதம் மூலம் உறுதியளித்துள்ளார்.
இக்கலந்துறையாடலில் இ.தொ.கா உபத்தலைவரும் முன்னாள் மத்தியமாகாண சபை உறுப்பினருமான பழனி சக்திவேல்,கொட்டக்கலை பிரதேச சபை தவிசாளர் ராஜமணி பிரசாந்த் உட்பட்ட பலர் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
23 minute ago
32 minute ago
49 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
32 minute ago
49 minute ago
2 hours ago