Gavitha / 2020 நவம்பர் 25 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி. சந்ரு
நானு-ஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளாரண்டன் தோட்டக் காரியாலயம், கடந்த மூன்று தினங்களாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தோட்டக் காரியாலயத்தில், தபால் சேவையில் பணி புரியும் நபரொருவரின் கொழும்பில் உள்ள மகளுக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், இவர் சமீபத்தில் தனது மகளின் வீட்டுக்குச் சென்று வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதையடுத்தே, இந்தத் தோட்டக்காரியாலயம் மூடப்பட்டு, இந்தத் தோட்டக் காரியாலயத்தில் பணிபுரியும் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்தத் தோட்டக் காரியாலயத்தில், நானு- ஓயா கெல்சி பகுதியைச் சேர்ந்த ஒருவரும் உள்ளடங்குகின்றார்.
இதனால், கெல்சி தோட்டப் பாடசாலை மாணவர்கள், எபஸ்போட் பாடசாலைக்கு கல்வி நடவடிக்கைகளுக்காக சென்றபோது, பாடசாலை அதிபர்கள் அவர்களை பாடசாலைக்குள் அனுமதிப்பதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.
22 Jan 2026
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Jan 2026
22 Jan 2026